முகப்புகோலிவுட்

2019 எனக்கு நல்ல ஆண்டாக இருக்கும்- அதுல்யா

  | December 27, 2018 11:39 IST
Athulya Ravi

துனுக்குகள்

  • கோயம்பத்தூர் பொண்ணு அதுல்யா
  • நாடோடிகள் 2 படத்தில் இவர் நடிக்கிறார்
  • சுட்டுபிடிக்க உத்தரவு படத்தில் நடித்திருக்கிறார்
‘காதல் கண்கட்டுதே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தமிழ் பெண் அதுல்யா. ‘ஏமாலி'  படத்தில் தன்னுடைய மிடுக்கான நடிப்பில் ரசிகர்களை  தன்வசம் ஈர்த்தார்.

அடுத்து நாடோடிகள்2 முடித்து, சுட்டுபிடிக்க உத்தரவு படங்களை முடித்துவிட்டு அடுத்தடுத்த திரைப்படங்களில்  பிஸியாக இருந்தவரிடம் பேசினேன்…

“நாடோடிகள் 2 வேலைகள் முடிந்து அடுத்த ஆண்டு வெளியாக தயாராக இருக்கிறது. சுட்டு பிடிக்க உத்தரவு படமும் டப்பிங் வேலைகள் முடிந்து 2019ல் வெளியாக உள்ளது.
அடுத்து ஒரு பெரிய பேனரில் நான் கமிட்டாகி கிட்டதட்ட வேலைகள் முடிகின்ற நிலையில் இருக்கிறது.

இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வராத நிலையில் அது குறித்து நான் பேசமுடியாது. இன்னொரு படம் பேசிக்கொண்டிருக்றேன்.”  என்றவரிடம் சசி குமார், மற்றும் சமுத்ரகனியுடன் வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது என்றேன்.
 
“ஒரு நல்ல அனுபவம் எனக்கு அவங்ளோடு ஒர்க் பண்ணும் போது கிடச்சது. சசி குமார் சார், சமுத்திரகனி சார் ரெண்டு பேரும் ஏற்கனவே நல்ல நண்பர்கள்.

அவங்ளோடு டீம் எப்போதும் கலகலப்பா இருக்கும் என்று கேள்வி பட்டிருக்கேன், இப்போதான் அவங்களோட ஒர்க் பண்ணியிருக்கேன். கடைசி நாள் படபிடிப்பின் போது எல்லாறுமே அழுதுவிட்டோம். நங்க ஒரு குடும்பமாக இந்த படத்தில் வேலை செய்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.”
 
 என்றவரிடம் கடந்த வாரம் உங்களுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் எப்படி இருந்தது என்றேன்.

“என்னுடைய அப்பா, அம்மா, பாட்டி, ஸ்கூல், காலேஜ் நண்பர்களோடு வீட்டிலே சூப்பரா இந்த பிறந்தநாள் கொண்டாடினேன்.

இந்த 2018 ஆண்டு நிறைய படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது. 2019 ஆண்டுகளில் அவை அத்தனையும் ரிலிசாக இருக்கிறது.
அதனால் 2019 எனக்கு ஒரு நல்ல ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு ஆண்டு புத்தாண்டின் போதும் பல பேர் நல்ல முடிவுகள் எல்லாம் எடுப்பார்கள் ஆனால் அதை பின்பற்ற மாட்டார்கள் நான் உட்பட.

அதனால் வருகின்ற புத்தாண்டில் எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த ஆண்டு கொடுத்த துன்பங்களை எல்லாம் மறந்துவிட்டு மகிழ்ச்சியை மட்டும் அடுத்த ஆண்டு கொண்டு போகவேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொண்டு” புத்தாண்டு மற்றும் பொங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து விடைப்பெற்றார் அதுல்யா
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்