விளம்பரம்
முகப்புகோலிவுட்

பிரபுதேவா படத்திற்காக பாடகியான நடிகை

  | March 12, 2018 12:31 IST
Charlie Chaplin 2

துனுக்குகள்

  • ‘சார்லி சாப்ளின்’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • இதில் நிக்கி கல்ராணி, ஆதா ஷர்மா என டபுள் ஹீரோயின்ஸாம்
  • ஆதா ஷர்மா பாடியுள்ள முதல் பாடல் இதுதானாம்
2002-ஆம் ஆண்டு பிரபு தேவா, பிரபு நடிப்பில் வெளியான படம் ‘சார்லி சாப்ளின்’. ஷக்தி சிதம்பரம் இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் ஷக்தி சிதம்பரம் – பிரபு தேவா – பிரபு மூவரும் கைகோர்த்துள்ளனர். இதில் நிக்கி கல்ராணி, ஆதா ஷர்மா என டபுள் ஹீரோயின்ஸாம்.

மேலும், முக்கிய வேடங்களில் ‘மகதீரா’ புகழ் தேவ்கில், சமீர் கோச், ரவி மரியா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடிக்கின்றனர். இதனை ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். அம்ரிஷ் இசையமைக்கும் இதற்கு சௌந்தரராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், கிரேஸி மோகன் வசனம் எழுதியுள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

இந்நிலையில், படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகை ஆதா ஷர்மா பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதா ஷர்மா பாடியுள்ள முதல் பாடல் இதுதானாம். படத்தை இந்தாண்டு (2018) மே மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் படத்தின் டிரெய்லர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்