முகப்புகோலிவுட்

‘அஜித் 59’யில் சிம்பு பட இயக்குநர்

  | December 15, 2018 15:47 IST
Thala 59

துனுக்குகள்

 • ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்கவிருக்கிறார்
 • இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்
 • படத்தை அடுத்த ஆண்டு (2019) மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
விவேகம்' படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விஸ்வாசம்'. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடியுள்ளார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகுமாம்.
 
இதனையடுத்து அஜித்தின் 59-வது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று' புகழ் இயக்குநர் வினோத் இயக்குகிறார். இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ்' நிறுவனத்துடன் இணைந்து மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது ‘Bayview Projects LLP' நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படம் ஹிந்தியில் வெளியான ‘பிங்க்' (Pink) படத்தின் ரீமேக்காம்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான இப்படத்தில் அமிதாப் பச்சன், டாப்சி நடித்திருந்தனர். தமிழ் வெர்ஷனுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது, இதில் முக்கிய வேடத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2019) மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.


  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்