முகப்புகோலிவுட்

சாமி ஸ்கொயரில் இடம்பெறும் ‘அதிரூபனே’ பாடல்

  | July 10, 2018 17:28 IST
Adhiroobaney Single Track

துனுக்குகள்

  • விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்
  • இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்
  • இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, ஹரியின் ‘சாமி ஸ்கொயர்’, ஆர்.எஸ்.விமலின் ‘மஹாவீர் கர்ணா’, ராஜேஷ்.எம்.செல்வா படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என டபுள் ஹீரோயின்ஸாம்.

இதன் முதல் பாகம் மெகா ஹிட் என்பதால், இந்த படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. முக்கிய வேடங்களில் ‘இளைய திலகம்’ பிரபு, சூரி, பாபி சிம்ஹா, OAK.சுந்தர், ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சிபு தமீன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
 

‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இதற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், படத்தில் இடம்பெறும் 'அதிரூபனே' எனும் பாடலை வெளியிட்டுள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்