விளம்பரம்
முகப்புகோலிவுட்

மணிரத்னத்தின் கதாநாயகிகள் அனைவரும் சுதந்திரமானவர்கள் - அதிதி ராவ் ஹைதரி

  | March 10, 2017 17:09 IST
Celebrities

துனுக்குகள்

  • மணிரத்னத்தின் கதாபாத்திரங்கள் வரையறுக்கப்பட்ட குணநலன்களை கொண்டிருக்கும்
  • வாழும் கவிதையை போன்றவர் இயக்குநர் மணிரத்னம்
  • மணிரத்னத்தின் இயக்கத்தில் ஆழ்ந்த நுட்பம் இருக்கும்
ஏற்கனவே காற்று வெளியிடை திரைப்படத்தின் பாடல் டீஸர்கள் வெளியாகி படத்த்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் மணிரத்னம் அவர்களின் படங்களில் வரும் கதாநாயகிகள் என்றுமே ஸ்பெஷல் தான், அந்த வகையில் நம்முடைய இதயங்களை மற்றொரு கதாநாயகியும் விரைவில் வருடவிருக்கிறார். காற்று வெளியிடை திரைப்படத்தின் நாயகி அதிதி ராவ் ஹைதரியுடன் உரையாடிய பொழுது, எவ்வாறு தன்னுடைய கனவு நினைவானது என்பது குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

இயக்குநர் மணிரத்னம் படங்களில் கதாநாயகியின் கதாபாத்திரம் என்றுமே மிக அழகாவும், வலிமையானதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்த வரிசையில் அதிதி ராவ் ஹைதரியும் இணைந்ததை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இந்த தருணத்தை எதிர்பார்த்து தான் காத்திருந்துள்ளார் அதிதி ராவ் ஹைதரி. எப்பொழுதும் மணிரத்னம் அவர்களின் பெண் கதாபாத்திரங்கள் வரையறுக்கப்பட்ட குணநலன்களை கொண்டிருக்கும். அதில் எந்த கதாபாத்திரத்தை ஆழ்ந்து கவனித்தார் என்பதை பற்றி நம்மிடம் கூறும்பொழுது, "இயக்குநர் மணிரத்னத்தின் திரைப்பட கதாநாயகிகளில் பிடித்தமான பெண் கதாபாத்திரங்களை கூறுவது மிகவும் கடினம். ஏனென்றால், அனைத்து கதாபாத்திரங்களும் ஸ்பெஷல் தான்! சிறிய விஷயங்கள் கூட மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மணிரத்னம் அவர்களின் கதாநாயகிகள் மென்மையாகவும், ஆளுமையுடனும், அன்பாகவும், பிடிவாதமாகவும் இருப்பார்கள். மேலும் சுதந்திரமாகவும் அதே வேளையில் பாதிக்கப்படக்கூடிய கதாபாத்திரமாகவும் இருக்கும். நீங்கள் ஒரு சில படங்களில் பார்த்திருக்கலாம் காதல் வசப்படுவதற்கு எந்த அளவு தைரியம் இருக்குமோ அதே தைரியம் அந்த காதலை விட்டு விலகி செல்வதற்கும் அந்த கதாபாத்திரத்திடம் இருக்கும். பல நேரங்களில், பெண் கதாபாத்திரங்கள் முட்டாள்தனமாகவும் அதே வேளையில் தடுத்து நிறுத்த இயலாத கருணை கொண்ட கதாபாத்திரமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். அத்தனை விஷயங்கள் இருந்தாலும், மேலே கூறிய அனைத்து கதாபாத்திரங்களின் நடிப்பும் நமக்கு பிடித்த விதத்தில் தான் படமாக்கப்பட்டிருக்கும். ஒரு நடிகையாக, மணிரத்னம் படங்களில் நடிப்பது குறித்து எப்பொழுதும் கனவு கண்டுள்ளேன் அது தற்பொழுது சாத்தியமாகியுள்ளது.
கவிதை நிரம்பிய காட்சியமைப்பு!
 
aditi rao hydari kaatru veliyidai

காற்று வெளியிடை திரைப்படத்தின் பாடல் டீஸர்களில் ஒரு ஆழ்ந்த கவிதையை போன்ற உணர்வு இருக்கும். டீஸரின் காட்சியமைப்பும், படமாக்கப்பட்ட பகுதிகளும், ஆடைவடிவமைப்பும் பார்ப்போரை காதல் வசப்படுத்தும். அதிதி ராவ் ஹைதரி இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ளவர் என்பது அறிந்ததே. வாழும் கவிதையை போன்ற இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி, அவர் எவ்வாறு கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பார்? படப்பிடிப்பின் பொழுது நடந்த சம்பவங்கள் ஏதேனும் கவிதையை உங்களுக்கு நியாபகப்படுத்தியதா? "ஆம், நிச்சயம்! படப்பிடிப்பின் காட்சிகள் கவிதையை நியாபகப்படுத்தும், அந்த கவிதை நிச்சயம் திரையிலும் வெளிப்படும். உதாரணமாக, "வான் வருவான்" பாடல் காட்சியில் நான் கார்த்தியை நோக்கி செல்வேன், அவர் என்னை கட்டி அணைப்பார். அந்த காட்சி "ஆர்கன் பாமுக்" எழுதிய "ஸ்னோ" என்ற கவிதையின் ஒரு வரியை நியாபகப்படுத்தியது. அந்த கவிதை "ஒருவர், தம்மை தன் கையால் கட்டி அணைக்கும் பொழுது, இந்த உலகமே நம் கையில் இருப்பதை போன்றதொரு உணர்வு ஏற்படும் அதுவே உண்மையான சந்தோசம்"

சஞ்சய் லீலா பன்சாலி vs மணிரத்னம்

இந்த திறமையான நாயகி மற்றொரு தலைசிறந்த இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி அவர்களின் இயக்கத்தில் "பத்மாவதி" என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர் மணிரத்னம் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி இருவரின் எண்ணங்கள், இயக்க முறை குறித்து நாம் கேட்டபொழுது , அதற்க்கு பதிலளிப்பதற்கு சற்றே தயங்கினார் அதிதி ராவ் ஹைதரி. அதற்கான காரணம் குறித்தும் நம்முடன் பகிர்ந்துகொண்டார், "அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பார்க்கமுடியாது. அவர்கள் இருவரின் இயக்கத்திலும் ஒரு மிக சிறந்த நுட்பம் உண்டு சஞ்சய், மணிரத்னம் இவர்கள் இருவரை பற்றிய கருத்தினை தெரிவிப்பதற்கு நாம் நிறைய படித்து, ஆழ்ந்த அறிவினை பெற்றிருக்க வேண்டும்" இந்த இரு பெரும் இயக்குநர்களுடன் ஒரு சில அதிர்ஷ்டமுள்ள நடிகைகள் மட்டுமே பணிபுரிந்துள்ளார். அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி? "எளிமையாக கூறவேண்டுமானால், இயக்குநர் மணிரத்னம் மைக்ரோ எக்கனாமிக்ஸ் போன்றவர்; இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே யான உணர்வினை அழகாக பதிவு செய்வார். சஞ்சய் லீலா பன்சாலி மேக்ரோ எக்கனாமிக்ஸ் போன்றவர்; இயல்பு வாழ்க்கையை மீறிய விதமாக அவருடைய படங்கள் இருக்கும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்