விளம்பரம்
முகப்புகோலிவுட்

அஜித், விஜய்-யைத் தொடர்ந்து மகேஷ் பாபு

  | September 13, 2017 15:16 IST
Thalapathy Vijay

துனுக்குகள்

  • மகேஷ் பாபு கைவசம் 3 படங்கள் உள்ளது
  • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படம் தமிழ் & தெலுங்கிலும் தயாராகிறது
  • இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது
‘பிரம்மோற்சவம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு நடிப்பில் ரெடியாகி வரும் படம் ‘ஸ்பைடர்’. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி ஆடியுள்ளார். நம்மை மிரட்டும் வில்லன்களாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும், பரத்தும் நடித்துள்ளனர். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, மலையாள நடிகர் ஹரிஷ் பெராடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனராம்.
 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். தாகூர் மதுவுடன் இணைந்து ‘என்.வி.ஆர். சினிமா’ நிறுவனம் சார்பில் என்.வி.பிரசாத் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். கடந்த வாரம் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
 
இதன் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. படத்தின் டிரையிலரை வருகிற செப்டெம்பர் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர். தற்போது, படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், அஜித்தின் ‘விவேகம்’ மற்றும் விஜய்யின் ‘தெறி’ ஆகிய 2 படங்களின் சேட்டிலைட் உரிமைகளை ‘சன் டிவி’ வாங்கியது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்பைடர்-ஐ தமிழில் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமும், தெலுங்கில் ‘ரிலையன்ஸ்   எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனமும் செப்டெம்பர் 27-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்