விளம்பரம்
முகப்புகோலிவுட்

துருவ நட்சத்திரத்துடன் இணைந்த பிரபல நட்சத்திரம்

  | March 14, 2017 13:02 IST
Dhruva Natchathiram Movie Cast

துனுக்குகள்

  • துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீஸர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது
  • முதல் முறையாக இணையும் கவுதம் - விக்ரம் கூட்டணி
  • சென்னை மற்றும் குன்னூரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரமின் நடிப்பில் தமிழ் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்’. சில தினங்களுக்கும் முன் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியிருக்கிறது.

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் வித்தியாசமான கதைக்களம் மற்றும் சியான் விக்ரமின் மாறுபட்ட முகம் என டீஸர் செம அதிரடியாக இருந்தது.

தற்போது இப்படத்தில் காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, குன்னூர் என மாறி மாறி நடந்து வருகிற நிலையில் படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்