முகப்புகோலிவுட்

ஆறுச்சாமிக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்

  | July 04, 2018 11:26 IST
Vikram Saamy Square

துனுக்குகள்

  • இதில் விக்ரம் அப்பா, மகன் என டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார்
  • இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்
  • படக்குழுவினரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக த்ரிஷா விலகினார்
விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, ஹரியின் ‘சாமி ஸ்கொயர்’, ஆர்.எஸ்.விமலின் ‘மஹாவீர் கர்ணா’, ராஜேஷ்.எம்.செல்வா படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘சாமி ஸ்கொயர்’-யில் விக்ரம் அப்பா, மகன் என டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார். மகன் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

‘சாமி’யில் விக்ரமுக்கு ஜோடியாக புவனா என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்த த்ரிஷா, படக்குழுவினரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ‘சாமி ஸ்கொயர்’யிலிருந்து விலகினார். தற்போது, அப்பா விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதல் பாகம் மெகா ஹிட் என்பதால், இந்த படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

முக்கிய வேடங்களில் ‘இளைய திலகம்’ பிரபு, சூரி, பாபி சிம்ஹா, OAK.சுந்தர், ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சிபு தமீன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இதற்கு ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்