முகப்புகோலிவுட்

ரசிகர்களுடன் தரையில் அமர்ந்து செல்பி எடுத்து கொண்டாரா தல!!!

  | February 16, 2019 01:20 IST

துனுக்குகள்

  • ரசிகர்களுடன் தரையில் அமர்ந்து செல்பி எடுத்து கொண்ட எளிமையான நடிகர் அஜித்.
  • இவர் தற்போது துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காட்டி வருகிறார்.
  • கார் மற்றும் பைக் மீது தீரா காதல் கொண்டவர்.
உடற்பயிற்சி, படப்பிடிப்பு என்று மட்டுமே இருந்து விடாமல் கார், பைக் மீது அசட்டு தனமான காதல் கொண்டவர் நடிகர் அஜித்.  இதுபோக எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்களுக்கு ஆள் இல்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய “தக்‌ஷா” என்னும் குழுவை உருவாக்கினார்கள்.  அந்த குழுவின் அலோசகராக நடிகர் அஜித் இடம்பெற்றிருப்பது தல ரசிகர்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது. 
 
தற்போது துப்பாக்கி சுடுதலில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார் அஜித்.  தினமும் அவர் பயிற்சிக்கு செல்வதை அறிந்த ரசிகர்கள், அவரைக் காண பயிற்சி கூடத்தில்  குழுமியிருந்தனர்.  பயிற்சியை முடித்துவிட்டு கிளம்பும்போது ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கையசைத்து வணக்கம் சொல்லியதுடன், அவர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டும் கொடுத்துள்ளார்.  மேலும் தன் ரசிகர்களுடன் தரையில் அமர்ந்து செல்பி எடுத்து கொண்ட பின்  காரி ஏறி புறப்பட்டிருக்கிறார்.  இவை அனைத்தும் சமூக வலைதளத்தில் தற்போது வைரல் வீடியோவாக உலா வருகிறது.  அவர் துப்பாக்கி சுடுவது போன்ற புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்