விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஹாரர் ஜானரில் உருவாகவுள்ளதா அஜித்தின் 'விசுவாசம்'?

  | March 02, 2018 15:58 IST
Viswasam Cast

துனுக்குகள்

  • அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார்
  • இது ‘தல’ அஜித்தின் கேரியரில் 58-வது படமாம்
  • இதன் ஷூட்டிங்கை இம்மாத இறுதியில் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளனர்
‘வீரம், வேதாளம்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணி அமைத்து, கடந்த ஆண்டு ரிலீஸான படம்‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் சிவாவே இயக்கவுள்ளார். இது ‘தல’ அஜித்தின் கேரியரில் 58-வது படமாம். ‘விசுவாசம்’ என டைட்டிலிட்டுள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார். மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். டி.இமான் இசையமைக்கவுள்ள இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். ‘மங்காத்தா’ படத்திலிருந்தே சால்ட் & பெப்பர் லுக்கில் வலம் வந்த அஜித், இதில் மிக ஸ்டைலிஷாகவும், செம ஸ்லிம்மாகவும் தோன்றவுள்ளாராம். சமீபத்தில், படத்திற்கு பூஜை போடப்பட்டது.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது. படத்தின் ஷூட்டிங்கை வருகிற மார்ச் 23-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் துவங்கவுள்ளனர். படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படம் ஹாரர் ஜானரில் தயாராகவிருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இது குறித்து ‘விசுவாசம்’ டீமில் விசாரித்தபோது “பரவி வரும் இச்செய்தி வதந்தியே. இப்படம் கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெயினராக இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்