முகப்புகோலிவுட்

ஹைதிராபாத்தில் பிரம்மாண்ட செட், சென்னை, மும்பையில் ஷூட் - 'விசுவாசம்' அப்டேட்

  | March 06, 2018 12:55 IST
Viswasam Movie

துனுக்குகள்

  • இதன் ஷூட்டிங்கை வருகிற மார்ச் 23-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளனர்
  • ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் செட் போடப்படுகிறதாம்
  • இப்படம் இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகுமாம்
‘வீரம், வேதாளம்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணி அமைத்து, கடந்த ஆண்டு ரிலீஸான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் சிவாவே இயக்கவுள்ளார். இது ‘தல’ அஜித்தின் கேரியரில் 58-வது படமாம். ‘விசுவாசம்’ என டைட்டிலிட்டுள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார். மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். டி.இமான் இசையமைக்கவுள்ள இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். ‘மங்காத்தா’ படத்திலிருந்தே சால்ட் & பெப்பர் லுக்கில் வலம் வந்த அஜித், இதில் மிக ஸ்டைலிஷாகவும், செம ஸ்லிம்மாகவும் தோன்றவுள்ளாராம். சமீபத்தில், படத்திற்கு பூஜை போடப்பட்டது.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது. படத்தின் ஷூட்டிங் வருகிற மார்ச் 23-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. அதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் செட் போடப்படுகிறதாம். தற்போது, பாடல் காட்சியுடன் தொடங்கவுள்ள இந்த முதல் ஷெடியூல் ஏப்ரல் மாதம் 2-ஆம் வாரம் வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படம் இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகுமாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்