முகப்புகோலிவுட்

பிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியாக நடிக்கும் அக்ஷரா ஹாசன்

  | July 11, 2018 16:27 IST
Akshara Haasan

துனுக்குகள்

  • இதில் அக்ஷரா ஹாசன், மீரா மிதுன் என டபுள் ஹீரோயின்ஸாம்
  • இந்த படத்தில் விக்ரம் கேரக்டருக்கு ஜோடி இல்லையாம்
  • கமல் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்
கமல்ஹாசனின் ‘தூங்கா வனம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜேஷ்.எம்.செல்வா. இவர் கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவர். ‘தூங்கா வனம்’ ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ராஜேஷ்.எம்.செல்வா இயக்கவிருக்கும் புதிய படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விக்ரம் கேரக்டருக்கு ஜோடி இல்லையாம். ஆனால், படத்தில் அக்ஷரா ஹாசன், ‘8 தோட்டாக்கள்’ புகழ் மீரா மிதுன் என டபுள் ஹீரோயின்ஸ் நடிக்கவுள்ளனர். தற்போது, அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகர் நாசரின் மகன் அபி மெஹ்தி ஹாசன் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’மூலம் தயாரிக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இதற்கு குணல் ராஜன் சவுண்ட் டிசைனராக பணியாற்றவிருக்கிறார். ஷூட்டிங்கை ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்