முகப்புகோலிவுட்

19 ஆண்டுகள் கடந்தும் இளைய தலைமுறைகள் மீது பாயும் அலை “அலைபாயுதே” 19YearsOfAlaipayuthey

  | April 15, 2019 13:49 IST
Alaipayuthey Movie

துனுக்குகள்

  • மணிரத்னம் இப்படத்தை இயக்கி இருந்தார்
  • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார்
  • பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் மாதவன் தமிழில் முதல் முறையாக அறிமுகமான திரைப்படம் “அலைபாயுதே”. இந்த திரைப்படம் கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் 14ல் வெளியானது. தற்போது 19 ஆண்டுகள் ஆகியும் அலைபாயுதே படமும் பாடல்களும் இன்றும் இளைய தலைமுறைகளின் காதுகளில் அந்த அலை பாய்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.
 
dpclh0j8

காதல் உணர்வுகளையும், காதலின் பிரிவையும் உணர்வுகளை தொடும் திரைக்கதையில் இந்த படம் உருவாகி இருந்தது.

mpm8e3s8

இன்று மணிரத்னமே நினைத்தாலும் அலைப்பாயுதே போன்று ஒரு காதல் படத்தை அவரால் கொடுக்க முடியாது என்று பலரும் சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் மனதில் தடம் பதித்தது அந்த படம்.
 
v37eqlh8

மாதவனுக்கு தமிழில் அலைபாயுதே முதல் படம் என்றாலும், தனது சிறந்த நடிப்பால் முதல் படத்திலே தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தை பெற்ற தந்த படம் அது.
 
4qpna2fg

மாதவன், ஷாலினியுடன் சுவர்ணமால்யா, அரவிந்த சாமி, குஷ்பு, ஜயசுதா, விவேக் இன்னும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
 
1m2ld7q

ஏ.ஆர். ரகுமானின் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் 19 ஆண்டுகள் கடந்தும் இன்றைய இளைய தலைமுறைகள் முனுமுனுக்கும் வரிகளாக ஆழப்பதிந்திருக்கிறது.
 
lgt1ohco
 
கடந்த ஏப்ரல் 14, 2019 நாளோடு 19ஆம் ஆண்டை இப்படம் நிறைவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்