விளம்பரம்
முகப்புகோலிவுட்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை வெகுண்டெழுந்த அமலா பால்

  | August 11, 2017 12:19 IST
Vijay Fans

துனுக்குகள்

  • சமூக வலைத்தளங்களில் பெண்களை கேலி செய்வது என்பது ஒரு ஃபேஷனாக மாறியுள்ளது
  • டிவிட்டர் பக்கத்தில் மோசமான வார்த்தைகளால் கமெண்ட்களை பதிவு செய்தனர்
  • விஜய்யும் இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டார்
இன்று சமூக சூழ்நிலையில் பெண்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லை அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பெண்களை கேலி செய்வது என்பது ஒரு ஃபேஷனாக மாறியுள்ளது என்று நடிகை அமலா பால் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல பெண் பத்திரிகையாளர் ஒரு தனது டிவிட்டர் தளத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சுறா’ படம் குறித்த தன்னுடைய கருத்தை தெரிவித்தார். அது எதிர்மறையான விமர்சனம் என்பதால் ஆத்திரமடைந்த நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அந்த பெண் பத்திரிக்கையாளரின் டிவிட்டர் பக்கத்தில் மிகவும் மோசமான வார்த்தைகளால்  கமெண்ட்களை பதிவு செய்ததுமட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் அவரை கொச்சையாக விமர்சனம் செய்தனர். 

அதனால், சென்னை கமிஷனர் அலுவலகத்தில்  புகார் அளித்த பெண் பத்திரிகையாளரின் புகார் மனுவை ஏற்றுக்கொண்டதுடன் பலரின் மீதும் எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து நடிகர் விஜய்யும் இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ரசிகர்களை கண்டித்து அறிக்கை ஒன்றும் வெளியிட்டார். 
இந்நிலையில், "பெண் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்லாமல் குறிப்பாக சமூக வலைதளங்கள் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பெண்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிபடுத்த இயலவில்லை"  என்று நடிகை அமலா பால்  சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்