முகப்புகோலிவுட்

மீண்டும் பூதாகாரமாகும் அமலாபால் பிரச்சனை

  | November 16, 2017 10:58 IST
Amala Paul Car Case

துனுக்குகள்

  • அமலாபாலின் இரண்டு படங்கள் ரிலீஸிற்கு தயார்நிலையில் உள்ளது
  • போலி ஆவணங்களால் ஏற்பட்ட பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை
  • கேரளாவில் வரிசெலுத்த மறுத்துவிட்டார் அமலாபால்
கேரளாவை பூர்விகமாகக் கொண்டவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் மைனா திரைப்படம் தான் அவரை வேறொரு தளத்திற்கு இட்டுச்சென்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவராக வளம்வந்து கொண்டிருக்கிறார். என்னதான் தவிர்க்கமுடியாத நடிகையாக இருந்தாலும் பல பிரச்சனைகளும் அவரை சுற்றி வளம்வந்துகொண்டே இருக்கின்றது.

ஆம், சமீபத்தில் அமலாபால் புதுச்சேரியில் வாங்கிய சொகுசு கார் ஒன்றின் வரி ஏய்ப்பு பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை. கேரளாவை பூர்விகமாக கொண்ட அமலாபால் போலி ஆவணங்களைக் கொண்டு புதுச்சேரியில் சொகுசு கார் வாங்கியதாக புகார் எழுந்தது. அதன்பிறகு எர்ணாகுளம் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் அந்த சொகுசு வாகனத்திற்கு கேரளாவில் வரி செலுத்தக்கூறி நடிகை அமலபாலிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். ஆனால், நடிகை அமலாபால் அந்த வாகனத்திற்கு கேரளாவில் வரிசெலுத்த முடியாது என பதில் அளித்துள்ளார். இதே பிரச்சனையில் சிக்கிய நடிகர்களான பகத் பாசில் மற்றும் சுரேஷ் கோபி இருவரும் கேரள போக்குவரத்து துறைக்கு வரிசெலுத்த முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரிசெலுத்த முன்வராத நடிகை அமலபாலின் மீது விரைவில் கேரளா குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.

அமலாபால் நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், திருட்டுப்பயலே இரண்டாம் பாகம் என இரண்டு படங்கள் தமிழகத்தில் ரிலீஸிற்கு தயார் நிலையிலுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்