விளம்பரம்
முகப்புகோலிவுட்

அமலா பாலின் கால்ஷீட் டைரியில் இணைந்த புதிய படம்

  | October 06, 2017 16:23 IST
Amala Paul Next Film

துனுக்குகள்

  • அமலா பால் கைவசம் 5 படங்கள் உள்ளது
  • ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் அமலா பால்
  • இதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் கமிட்டாகியுள்ளார்
தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திற்கு பிறகு அமலா பால் கைவசம் தமிழில் பாபி சிம்ஹாவின் ‘திருட்டுப்பயலே 2’, அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, விஷ்ணு விஷாலின் ‘ராட்ச்சசன்’, மலையாளத்தில் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

தற்போது, அமலா பால் கால்ஷீட் டைரியில் மற்றுமொரு புதிய படம் இணைந்துள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குநர் தீபு ராமானுஜம் என்பவர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் கமிட்டாகியுள்ளாராம்.

இன்னும் பெயரிடப்படாத இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் இதில் நடிக்கவிருக்கும் இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்