முகப்புகோலிவுட்

அட்வெஞ்சர் த்ரில்லர் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த அமலா பால்

  | December 29, 2018 15:35 IST
Adho Antha Paravai Pola

துனுக்குகள்

  • அமலா பால் கைவசம் 5 படங்கள் உள்ளது
  • இப்படத்தில் அதிக ஸ்டன்ட் காட்சிகள் இருக்கிறதாம்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது
விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்' படத்திற்கு பிறகு அமலா பால் கைவசம் தமிழில் கே.ஆர்.வினோத்தின் ‘அதோ அந்த பறவைபோல', ரத்னகுமாரின் ‘ஆடை', அறிமுக இயக்குநர் தீபு ராமானுஜம் படம், மலையாளத்தில் ப்ரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்' மற்றும் ஹிந்தியில் அர்ஜுன் ராம்பால் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘அதோ அந்த பறவை போல' திரைப்படம் ஜங்கிள் அட்வெஞ்சர் த்ரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது.

ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இதற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘சென்சுரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.
 
இப்படத்தில் அதிக ஸ்டன்ட் காட்சிகள் இருக்கிறதாம். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்