விளம்பரம்
முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டாருடன் மோதும் அமீர்

  | May 11, 2018 11:17 IST
Achamillai Achamillai Movie Release Date

துனுக்குகள்

  • இயக்குநர் அமீரே இப்படத்தில் நடித்து, தயாரித்துள்ளார்
  • முக்கிய வேடங்களில் ஹரிஷ், சாந்தினி ஆகியோர் நடித்துள்ளனர்
  • இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது
இயக்குநர் அமீர் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’. அறிமுக இயக்குநர் முத்துகோபால் என்பவர் இயக்கியுள்ளார். இயக்குநர் அமீரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘டீம் வொர்க் புரொடக்ஷன் ஹவுஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் இயக்குநர் முத்துகோபால், ஹரிஷ், சாந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். அருண் குமார் இசையமைத்துள்ள இதற்கு விவுரி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், அதியப்பன் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே நாளில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘காலா’ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்