விளம்பரம்
முகப்புகோலிவுட்

தன் ரசிகர்களை கடுமையாக எச்சரிக்கும் அமிதாப்

  | August 08, 2017 16:35 IST
Celebrities

துனுக்குகள்

  • இந்த ஆண்டு தனது 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் அமிதாப்
  • ரசிகர்கள் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக கொண்டாட தயாராகி வருகின்றனர்
  • யாருமே இல்லாத அல்லது யாருக்குமே தெரியாத இடத்திற்கு நான் செல்ல நேரிடும்
எல்லோராலும் 'பிக் பி' என்றழைக்கப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு வரும் அக்டோபர் மாதம் (இம்மாதம்) 11-ம் தேதி 75-வது வயது துவங்குகிறது.

அவருடைய பிறந்தநாள் விழாவை மிக சிறப்பாக கொண்டாட அவருடைய ரசிகர்கள் தற்போது முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்நிகழ்ச்சிக்கு நடிகர் அமிதாப் பச்சன் அனுமதி கொடுக்கவில்லையாம். இது ஒரு புறம் இருக்க அவர் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
 
’என்னுடைய 75-வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாட என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் அறிந்தேன். ஆனால், இதுபோன்ற பிரம்மாண்டங்களை நான் என்றைக்குமே ஏற்கவும் அனுமதிக்கவும் மாட்டேன். என் விருப்பத்திற்கு நீங்கள் மதிப்பு அளிக்கவில்லை என்றால் யாருமே இல்லாத அல்லது யாருக்குமே தெரியாத இடத்திற்கு நான் செல்ல நேரிடும்’ என்று கூறி பரபராக்கியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்