விளம்பரம்
முகப்புகோலிவுட்

மக்கள் செல்வனுடம் இணையும் சூப்பர் ஸ்டார் ஜோடி

  | March 14, 2017 11:30 IST
Movies

துனுக்குகள்

  • இந்த ஆண்டு மட்டும் 9 திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்
  • மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - கோகுல் கூட்டணி
  • "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது
இப்போதைக்கு தமிழ் சினிமா உலகில் கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர். தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிக் கொண்டே வருகிறார். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

நடிகர் கார்த்தியின் நடிப்பில் ‘காஷ்மோரா’ திரைப்படத்தை இயக்கிய பிறகு இயக்குநர் கோகுல், நகைச்சுவை கலந்த ஒரு கதையை தயார் செய்து வந்ததாகவும், இப்போது அந்த கதை எழுதும் பணி முடிந்துவிட்டதால் அதில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகி, சம்மதமும் வாங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் ‘2.0’ திரைப்படத்தில் நடித்துள்ள எமி ஜாக்ஸனை ஒப்பந்தம் செய்யப் போவதாக படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தகவல்கள் நமக்கு தெரிவிக்கின்றன. எதுவாக இருந்தாலும், இப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்