முகப்புகோலிவுட்

'இரும்புத்திரை' பட ஆங்ரி பேர்ட் பாடல் ப்ரோமோ

  | February 14, 2018 12:23 IST
Irumbuthirai

துனுக்குகள்

  • இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதன் பாடல்கள் மற்றும் டீஸர் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை வருகிற மார்ச் 29-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்
கோலிவுட்டில் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியுள்ளார். விஷாலுக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து வருகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். தற்போது, படத்தில் இடம்பெறும் ‘ஆங்ரி பேர்ட்’ எனும் பாடலின் ப்ரோமோவை காதலர் தின ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர். படத்தை வருகிற மார்ச் 29-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் (அபிமன்யுடு) ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    தொடர்புடைய விடியோ

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்