விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘கல்யாண வயசு’ பாடல் காப்பியா? – விளக்கமளித்த அனிருத்

  | May 22, 2018 15:45 IST
Kolamaavu Kokila Songs

துனுக்குகள்

  • இப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார்
  • சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ பாடல் வைரலானது
  • இப்பாடல் ஒரு ஆங்கில பாடலின் காப்பி என நெட்டிசன்கள் குற்றம் சாட்டினர்
பாலகிருஷ்ணாவின் ‘ஜெய் சிம்ஹா’ படத்திற்கு பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கைவசம் அஜித்தின் ‘விசுவாசம்’, அதர்வாவின் ‘இமைக்கா நொடிகள்’, சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்’, நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’, நெல்சன் திலீப்குமாரின் ‘கோலமாவு கோகிலா’, சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’, மகேஷ் வெட்டியாரின் ‘கோட்டயம் குர்பானா’, அறிவழகன் படம், சர்ஜுன் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘கோலமாவு கோகிலா’ (கோகோ) படத்தில் முக்கிய வேடங்களில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வரும் இதற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்து வருகிறார், நிர்மல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார்.சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் ‘எதுவரையோ, கல்யாண வயசு’ ஆகிய 2 பாடல்கள் வெளியிடப்பட்டது.

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள ‘கல்யாண வயசு’ பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. இந்நிலையில், இப்பாடல் ஒரு ஆங்கில பாடலின் காப்பி என நெட்டிசன்கள் குற்றம் சாட்டினர். தற்போது, இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்த அனிருத் “இந்த பாடலின் பீட்டை (Beat) ‘மந்த்ரா’ (Mantra) என்ற நிறுவனத்திடம் இருந்து முறையாக அனுமதி பெற்று தான் வாங்கி பயன்படுத்தியுள்ளேன்” என்று ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்