விளம்பரம்
முகப்புகோலிவுட்

என் மனதிற்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை அஞ்சலி ஓபன் டாக்

  | September 09, 2017 11:43 IST
Anjali

துனுக்குகள்

  • அஞ்சலி மற்றும் நடிகர் ஜெய் காதலித்து வருவதாக பரவலாக பேசப்பட்டது
  • உறுதி செய்யும் விதமாக அப்போ அப்போ சில புகைப்படங்களும் வெளியே வந்தது
  • காதல் - திருமணம் பற்றி நினைக்க தற்போது எனக்கு நேரம் இல்லை
நடிகை அஞ்சலி மற்றும் நடிகர் ஜெய் காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதகவும் பரவலாக பேசப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக அப்போ அப்போ சில புகைப்படங்களும் வெளியே வந்தது. இந்நிலையில் தற்போது இருவரும் பலூன் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூலமாக இவர்களது காதல் நெருக்கம் இன்னும் அதிகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே நடிகர் ஜெய்யை தான் காதலிக்காதது போல நடிகை அஞ்சலி சமீபத்தில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, "காதல் - திருமணம் பற்றி நினைக்க தற்போது எனக்கு நேரம் இல்லை. என்னுடைய மனதிற்கு பிடித்தவரை நான் இன்னும் பார்க்கவே இல்லை. காத்திருக்கிறேன், கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு முதலில் சொல்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் என்னையும் நடிகர் ஜெய்யையும் இணைத்து நிறைய செய்திகள் வெளி வந்து விட்டன. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எனக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்