முகப்புகோலிவுட்

தமிழில் படமாகிறது ஆருஷி கொலை வழக்கு

  | August 10, 2018 15:37 IST
Anjali Next Film

துனுக்குகள்

  • அஞ்சலி கைவசம் 6 படங்கள் உள்ளது
  • நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆருஷியின் கொலை வழக்கு
  • இதில் இன்னொரு நாயகியாக ராய் லக்ஷ்மி நடிக்கவுள்ளாராம்
விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்திற்கு பிறகு நடிகை அஞ்சலி கைவசம் மம்மூட்டியின் ‘பேரன்பு’, சசிகுமாரின் ‘நாடோடிகள் 2’, ராஜு விஸ்வநாத்தின் ‘லிசா’, விஜய் சேதுபதி படம், பிரவீன் பிக்காட்டின் ‘ஒ’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அஞ்சலி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2008-ஆம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி தல்வாரின் கொலை வழக்கை மையமாக வைத்து இப்படம் உருவாகவிருக்கிறதாம்.

இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ராய் லக்ஷ்மி நடிக்கவுள்ளாராம். வெகு விரைவில் இப்படத்தின் இயக்குநர் மற்றும் பணியாற்றவுள்ள இதர தொழில்நுட்ப கலைஞர்கள் – நடிகர்களின் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்