முகப்புகோலிவுட்

‘ஆன்ட் மேன் அண்டு தி வாஸ்ப்’ தமிழ் வெர்ஷன் டிரெய்லர்

  | June 21, 2018 14:47 IST
Marvel Movies

துனுக்குகள்

  • 2015-ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர் ஹீரோ’ படம் ‘ஆன்ட் மேன்’
  • இந்த படத்தின் 2-ஆம் பாகம் தயாராகியுள்ளது
  • இப்படத்தை ஜூலை 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
ஹாலிவுட்டில் 2015-ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர் ஹீரோ’ படம் ‘ஆன்ட் மேன்’. ‘ஆன்ட் மேன்’-ஆக பால் ருட் நடித்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்தின் 2-ஆம் பாகம் தயாராகியுள்ளது. ‘ஆன்ட் மேன் அண்டு தி வாஸ்ப்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதனையும் முதல் பாகத்தை இயக்கிய பேடன் ரீட் இயக்கியுள்ளார்.

பால் ருட் ‘ஆன்ட் மேன்’ கேரக்டரிலும், எவாஞ்சலின் லில்லி ‘வாஸ்ப்’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதனை ‘மார்வெல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் டப் செய்துள்ளனர்.
 

இப்படத்தை வருகிற ஜூலை 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் தமிழ் வெர்ஷன் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர் கோலிவுட் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்