முகப்புகோலிவுட்

தனது உதவி இயக்குநரின் படத்தில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்

  | September 12, 2018 12:43 IST
Nota

துனுக்குகள்

  • இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சடா நடிக்கிறார்
  • ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவர் ஆனந்த் ஷங்கர
  • இதன் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
கோலிவுட்டில் விக்ரம் பிரபுவின் ‘அரிமா நம்பி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆனந்த் ஷங்கர். இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். ‘அரிமா நம்பி’-க்கு பிறகு விக்ரமை வைத்து ‘இருமுகன்’ என்ற படத்தை இயக்கினார் ஆனந்த் ஷங்கர். தற்போது, ஆனந்த் ஷங்கர் இயக்கும் புதிய படமான ‘நோட்டா’வில் ஹீரோவாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மிகப் பெரிய வெற்றியால் விஜய் தேவரகொண்டாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சடா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகுகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் ஆனந்த் ஷங்கரின் குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸ் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்