முகப்புகோலிவுட்

"தலைமை ஏற்க வேண்டிய தருணம் வரும்" - இசைப்புயல் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

  | September 07, 2017 16:48 IST
One Heart

துனுக்குகள்

  • எனது கனவுகளை செயல்படுத்த தான் இந்த 'YM Studios' நிறுவனம்
  • இசை உலகை நேசிப்பவர்கள் அனைவரிடமிருந்தும் நிதி திரட்ட முடிவு செய்தோம்
  • வருவாய் அனைத்தும் 'ஒன் ஹார்ட் ஃபவுண்டேஷன்' க்கு அளிக்க முடிவு
எந்த துறையாக இருந்தாலும் பலர் சாதனைபடைப்பார்கள் சிலர் தான் வரலாறு படைப்பார்கள் அப்படி பட்ட சிலரில் ஒருவர் தான் இவர்... எப்போதுமே புன்னகை உடனே காணப்படும் இவர் அவ்வளவாக பேசமாட்டார் என்ற ஒரு பொதுவான கருத்து இருந்தாலும், இவரின் இசை உலகெங்கும் பேசும், பொதுவாக ஒரு மொழியில் அறிமுகமான இசை அமைப்பாளர்கள் மற்ற மொழிகளில் பெரிதாக ஜொலிக்கமாட்டார்கள் என்ற கூற்றினை தவிடு பொடியாக்கியவர், அனைவரையும் தன் இசையால் கட்டிபோட்டவருக்கு அறிமுகம் வேண்டுமா? இவரின் பெயரை தான் மொழிகளை தாண்டிய அனைத்து இசை ரசிகனும் மிக உற்சாகத்துடன் உச்சரிப்பானே என்ற நீங்கள் நினைக்கலாம், இருந்தாலும் இந்த மகா கலைஞானிக்குள் இருக்கும் இன்னொரு பக்கத்தை பற்றி அறிய தான் இந்த நேர்காணலும் அவரை பற்றிய அறிமுகமும், அவர் தான் ஆஸ்கர் நாயகன், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

25 ஆண்டுகால இசை பயணம், தனது முதல் படத்திலேயே தேசிய விருதில் துவங்கிய கடந்த 2009 ஆம் ஆண்டு உலக திரை அரங்கில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் வரை அத்தனை விருதுகளையும் பெற்று விட்டார் என கூறலாம், இத்தனை ஆண்டுகாலமாக இசை, பாடல்கள் என வலம் வந்தவர் தற்போது நடிப்பிலும், தயாரிப்பு துறையிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார், அதுவும் ஒரு நல்ல முயற்சிக்காக.

உலகெங்கிலும் உள்ள பல இசை கலைஞர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியிலாக, மருத்துவ உதவிக்காக தன்னை அணுகுபவர்களுக்காக அறக்கட்டளை ஒன்றினை துவங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், அதற்க்கு நிதி திரட்ட எடுக்கப்பட்ட ஒரு முயற்சி தான் இந்த 'one heart ' எனப்படும் 'concert film'. தன்னுடைய உலக இசை நிகழ்ச்சிகளை திரைப்பட வடிவில் தொகுத்து வெளியிட முடிவு செய்த ரஹ்மான், தன் நண்பர்களுடன் இணைந்து அந்த பணியை மிக சிறப்பாக முடித்தும் விட்டார்.
இப்படத்தை பற்றி அவரிடம் நேரடியாக உரையாட கேள்விகளை நாம் துவங்க, ஒவ்வொன்றிக்கும் தன் பாணியிலேயே மிக கூலாக பதிலளித்தார், இனி பேட்டியினுள் நான், ரஹ்மான் மற்றும் நீங்கள்...
 

இந்தியாவில் இதுவரை முயற்சிக்காத 'concert film 'எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது? "இந்தியாவில் பல விதமான ஜார்னர் திரைப்படங்கள் வெளியானது, ஆனால் 'concert film ' என்ற ஜார்னர் மட்டும் யாரும் தொடாமல் இருந்தது, இதனை பற்றி பேசும்போது முதலில் ரெக்கார்ட் பண்ணி பார்க்கலாம், 10 வருடத்திற்கு பிறகு அதனை பார்க்கும் திரையில் பார்க்கும் போது நல்ல இருக்குமென்று நினைத்தோம், அதற்காக உலக அளவில் நடத்தப்பட்ட என்னுடைய இசை நிகழ்ச்சியில் கேமராக்கள் பொருத்தப்பட்ட சில காட்சிகளை ஒளிப்பதிவு செய்து பார்க்கும் போது திரைப்படம் போல இருந்தது, அதனை அப்படியே திரைப்படம் போல் நன்றாக இருந்தது, உடனே படத்தை இயக்குவதற்க்காக என்னுடைய நண்பர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி துவங்கிவிட்டோம், அப்படி உருவானது தான் இந்த 'concert film'.

நல்ல முயற்சிக்காக "concert film" எடுக்கப்படுகிறதாக கேள்விப்பட்டோம் அதை பற்றி கூறுங்களேன், "இந்த முயற்சியின் மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால்... ஆஸ்கர் வாங்கிய பிறகு தொடர்ந்து பல உலக நாடுகளில் உள்ள இசை கலைஞர்களின் குடும்பங்களின் தேவை அதிகமாக இருந்தது அதிலும் குறிப்பாக, மருத்துவம் மற்றும் கல்வியில் உதவிகள் அதிகமாக தேவைப்பட்டது, அதனால் 'ஒன் ஹார்ட் ஃபவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து நான் மட்டும் அல்லாமல் இந்த இசை உலகை நேசிப்பவர்கள் அனைவரிடமிருந்தும் நிதி திரட்ட முடிவு செய்தோம், அதில் ஒரு முயற்சி தான் இந்த ஒன் ஹார்ட் திரைப்படம், இப்படத்தின் மூலம் வரும் வருவாய் அனைத்தும் இந்த தொண்டு நிறுவனத்திற்க்காக அளிக்க முடிவு செய்துள்ளோம்".

இசையமைப்பாளராக இத்தனை ஆண்டுகாலம் பயணித்த உங்களுக்கு தயாரிப்பு துறை அனுபவம் எப்படி உள்ளது? "சில சமயங்களில் தலைமைத்துவத்தை நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை வரும் அதற்காக நாம் தயாராகவும் இருக்க வேண்டும், நிறைய கனவுகள் எனக்குள் உள்ளது அதனை செயல்படுத்த தான் இந்த 'YM Studios' நிறுவனம், இந்த தளத்தை பயன்படுத்தி நிறைய "Music Concert Film" நிச்சயமாக வெளிவரும்".

இத்தருணத்தில் உங்களுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? "இதுவரை ஆதரவளித்த ரசிகர்களுக்கும் இனிமேல் ஆதரவளிக்க உள்ள ரசிகர்களுக்கும் மிக்க நன்றி, ஒன் ஹார்ட் திரைப்படத்திற்கு உங்களுடைய ஆதரவை தெரிவித்தால், அது உலகில் உள்ள பல இசை கலைஞர்களுக்கும் அவர்களது குடுமத்திற்கும் மருத்துவ உதவிக்காகவும், கல்வி உதவியாகவும் சென்று அடையும்" என்று கூறினார்.

இறுதியாக, "NDTV தமிழ் சினிமா நேயர்களுக்கு நன்றி" என்று கூறிவிட்டு தன் புன்னைகையுடன் நம்மிடமிருந்து விடைபெற்றார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்