முகப்புகோலிவுட்

‘புரூஸ் லீ’யின் வாழ்க்கை வரலாறு படத்தில் ‘இசை புயல்’

  | August 12, 2017 13:05 IST
Ar Rahman

துனுக்குகள்

  • பல்வேறு இந்திய மொழிகளிலும், ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்
  • உலகளவில் பிரபலமான நடிகர் புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாறு படமாகிறது
  • இப்படத்தை பிரபல நடிகர் சேகர் கபூர் இயக்கவுள்ளார்
இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான். கோலிவுட் மட்டுமின்றி பல்வேறு இந்திய மொழிகளிலும், சில ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஆகையால், உலகம் முழுவதும் ரஹ்மானுக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

மேலும், ‘தேசிய விருது’ முதல் ‘ஆஸ்கர் விருது’ வரை ரஹ்மான் குவித்துள்ளார். தற்போது, உலகளவில் பிரபலமான நடிகர் ‘புரூஸ் லீ’-யின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்திருந்த சேகர் கபூர் இயக்கவுள்ளார்.

இதற்கு ‘லிட்டில் டிராகன்’ (LITTLE DRAGON) என டைட்டில் சூட்டியுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்