விளம்பரம்
முகப்புகோலிவுட்

இந்திய திரை உலகின் முதல் மியூசிக் கான்சர்ட் திரைப்படம்

  | August 31, 2017 20:15 IST
Ar Rahman Film

துனுக்குகள்

  • மைக்கேல் ஜாக்சன் இசை வாழ்க்கை 'திஸ் இஸ் இட்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது
  • இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்' திரைப்படம் உருவாகியுள்ளது
  • கலைஞர்களின் அனுபவங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் இப்படத்தில் உள்ளது
பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக கொடிக்கட்டி பறந்தவர் மைக்கேல் ஜாக்சன் இவருடைய இசை உலக வாழ்க்கை திரைப்படமாக 'திஸ் இஸ் இட்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் பல மேடைகளில் மைக்கேல் ஜாக்சன் நிகழ்த்திய இசை நிகழ்ச்சிகள், அவர் நிகழ்த்திய உரைகள் என அனைத்தையும் இப்படத்தில் ஒருங்கிணைத்து அவருடைய ரசிகர்களுக்கு பொக்கிஷமாக கொடுக்கப்பட்டது. 'திஸ் இஸ் இட்' திரைப்படத்தை போன்ற தற்போது ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்' திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்திய திரை உலகில் முதல் மியூசிக் கான்சர்ட் திரைப்படம் என்ற பெருமையோடு உருவாகியுள்ள 'ஒன் ஹார்ட்', இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் திரை உலக இசை அனுபவங்கள், அவருடைய வாழ்க்கை பற்றி குறிப்புகள், இசைபுயலோடு பணியாற்றிய இசை கலைஞர்களின் அனுபவங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் உள்ளடக்கியுள்ளதாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 'ஒன் ஹார்ட்' திரைப்படம் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்