முகப்புகோலிவுட்

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் டீசரை வெளியிட்ட அனிருத்

  | August 27, 2018 22:19 IST
Arasiyalla Ithellam Satharanamappa

துனுக்குகள்

  • இதில் வீராவுக்கு ஜோடியாக மாளவிகா நாயர் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • மேலும், முக்கிய வேடங்களில் ஷாரா, பசுபதி நடித்துள்ளனர்
  • இதனை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது
‘நடுநிசி நாய்கள், ராஜதந்திரம்’ படங்களுக்கு பிறகு வீரா ஹீரோவாக நடித்து வரும் படம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’. இந்த படத்தை அவினாஷ் ஹரிஹரன் என்பவர் இயக்கி வருகிறார். இதில் வீராவுக்கு ஜோடியாக மாளவிகா நாயர் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் ஷாரா, பசுபதி நடித்துள்ளனர். மேட்லி ப்ளூஸ் என்ற மியூசிக் பேன்ட் இசையமைத்து வரும் இதற்கு சுதர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டீசரை பிரபல இசையமைப்பாளர் அனிருத் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்