முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டாரை இயக்கப் போகிறாரா ‘அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர்?

  | April 03, 2018 12:42 IST
Sandeep Reddy

துனுக்குகள்

  • மகேஷ் பாபு கைவசம் இரண்டு படங்கள் உள்ளது
  • மகேஷ் பாபுவின் 25-வது படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார்
  • டோலிவுட்டில் விஜய் தேவரகொண்டாவின் ‘அர்ஜுன் ரெட்டி’ மெகா ஹிட்டானது
ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ படத்திற்கு பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாரத் அனே நேனு’. கொரட்டால சிவா இயக்கி வரும் இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இதனையடுத்து வம்சி இயக்கவுள்ள புதிய படத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார்.

மகேஷ் பாபுவின் 25-வது படமான இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார். தற்போது, மகேஷ் பாபுவின் கால்ஷீட் டைரியில் இன்னொரு படம் இணைந்துள்ளது. இதனை ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் சந்தீப் ரெட்டி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. டோலிவுட்டில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்த ‘அர்ஜுன் ரெட்டி’ மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பாபுவுக்கு சந்தீப் ரெட்டி கூறிய கதை மிகவும் பிடித்து விட்டதாம். ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் துவங்கப்படுமாம். வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்