முகப்புகோலிவுட்

‘மெர்க்குரி’யை பாராட்டிய ‘அர்ஜுன் ரெட்டி’ பட இயக்குநர்

  | April 13, 2018 16:17 IST
Sandeep Vanga

துனுக்குகள்

  • இதில் பிரபு தேவாவுக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்
  • சைலண்ட் த்ரில்லராக தயாராகியுள்ள இப்படத்தில் வசனங்களே கிடையாதாம்
  • ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா
‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்க்குரி’. இதில் முக்கிய வேடங்களில் சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ பிரபு தேவாவுக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்.

இப்படத்தில் வசனங்களே கிடையாதாம். சைலண்ட் த்ரில்லராக தயாராகியுள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஸ்டோண் பென்ச் ஃபிலிம்ஸ் – பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
 
சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர் மற்றும் ப்ரோமோஷன் பாடல் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் காரணமாக தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் இப்படம் இன்று (ஏப்ரல் 13-ஆம் தேதி) ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த ‘அர்ஜுன் ரெட்டி’ எனும் தெலுங்கு பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ‘மெர்க்குரி’ டீமை வெகுவாக பாராட்டி வீடியோ ஒன்றை ஷேரிட்டுள்ளர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்