முகப்புகோலிவுட்

ஜீவாவுடன் இணைந்து நடிக்கும் அருள்நிதி

  | November 16, 2018 18:03 IST
Jeeva

துனுக்குகள்

  • ஜீவா கைவசம் நான்கு படங்கள் உள்ளது
  • இப்படத்தை ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது
  • இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக அருள்நிதி நடிக்கவுள்ளாராம்
‘கலகலப்பு 2' படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா கைவசம் ‘கீ, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, கொரில்லா, ஜிப்ஸி' ஆகிய 4 படங்கள் உள்ளது. தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டான இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக அருள்நிதி நடிக்கவுள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் ஜீவாவின் சகோதரர் ‘ஜித்தன்' ரமேஷ் தயாரிக்கவுள்ளார்.

வெகு விரைவில் இதன் இயக்குநர், இதில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் – பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்