முகப்புகோலிவுட்

அருள்நிதியின் ‘IAK’ சென்சார் ரிசல்ட்

  | March 03, 2018 10:28 IST
Iravukku Aayiram Kangal Movie

துனுக்குகள்

 • இப்படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது
 • கே.வி.ஆனந்த், அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மு.மாறன்
 • இதன் டிரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்தது
ராதாமோகனின் ‘பிருந்தாவனம்’ படத்திற்கு பிறகு அருள்நிதி கைவசம் மு.மாறனின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ராதாமோகன் இயக்கவுள்ள புதிய படம், கரு.பழனியப்பனின் ‘புகழேந்தி எனும் நான்’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கும் மு.மாறன், கே.வி.ஆனந்த் - அறிவழகன் போன்றோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

அருள்நிதிக்கு ஜோடியாக ‘சாட்டை’ புகழ் மகிமா நம்பியார் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், ஆனந்தராஜ், அஜ்மல், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சுஜா வருநீ, சாயா சிங், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இதற்கு சாம்.சி.எஸ் இசையமைப்பாளராகவும், அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராகவும், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளது. சமீபத்தில்,வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை பார்த்த சென்சார் குழுவினர் எந்தவித கட்டுமின்றி ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்