விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் மிரட்டலான டிரையிலர்

  | January 10, 2018 19:39 IST
Iravukku Aayiram Kangal Movie

துனுக்குகள்

  • இதில் அருள்நிதிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் டூயட் பாடி ஆடி வருகிறார்
  • இப்படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகுகிறது
  • இதன் டிரையிலரை இன்று வெளியிட்டுள்ளனர்
ராதாமோகனின் ‘பிருந்தாவனம்’ படத்திற்கு பிறகு அருள்நிதி கைவசம் மு.மாறனின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ராதாமோகன் இயக்கவுள்ள புதிய படம், கரு.பழனியப்பனின் ‘புகழேந்தி எனும் நான்’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கும் மு.மாறன், கே.வி.ஆனந்த் - அறிவழகன் போன்றோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

அருள்நிதிக்கு ஜோடியாக ‘சாட்டை’ புகழ் மகிமா நம்பியார் டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், ஆனந்தராஜ், அஜ்மல், ஜான் விஜய், ஆடுகளம் நரேன்,சுஜா வருநீ, சாயா சிங், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறதாம். க்ரைம் த்ரில்லராக உருவாகி வரும் இதற்கு சாம்.சி.எஸ் இசையமைப்பாளராகவும், அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராகவும், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
 

இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து வருகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரையிலரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

 

    தொடர்புடைய விடியோ

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்