முகப்புகோலிவுட்

மார்ச்சில் துவங்குகிறது அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’

  | December 03, 2018 17:24 IST
Arun Vijay

துனுக்குகள்

  • அருண் விஜய் கைவசம் 5 படங்கள் உள்ளது
  • ‘பாக்ஸர்’ அருண் விஜய்யின் கேரியரில் 27-வது படமாம்
  • இந்த படத்தை இயக்குநர் பாலாவின் உதவி இயக்குநர் விவேக் இயக்கவுள்ளார்
மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அருண் விஜய் கைவசம் மகிழ் திருமேனியின் ‘தடம்', ரத்ன சிவாவின் ‘வா டீல்', பிரபாஸின் ‘சாஹோ', விஜய் ஆண்டனியின் ‘அக்னிச் சிறகுகள்' என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. சமீபத்தில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமானார்.

‘பாக்ஸர்' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை விவேக் என்பவர் இயக்கவுள்ளார். இவர் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். ‘பாக்ஸர்' அருண் விஜய்யின் கேரியரில் 27-வது படமாம். லியோன் இசையமைக்கவுள்ள இதற்கு மார்கஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், மதன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். இதனை ‘Etcetera எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தில் அருண் விஜய் பாக்ஸராக வலம் வரவுள்ளார். தற்போது, இப்படத்துக்காக இம்மாதம் (டிசம்பர்) மலேசியா மற்றும் வியட்நாமில் அருண் விஜய் பாக்ஸிங் மற்றும் மார்ஷியில் ஆர்ட்ஸுக்கான டிரெயினிங்கை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஸ்டன்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் மற்றும் சில ஸ்டன்ட் மாஸ்டர்கள் அருண் விஜய்-க்கு டிரெயினிங் கொடுக்கவுள்ளனர். படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்