விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஃபிலிம் ஃபெஸ்டிவல்களில் கவனம் ஈர்த்த ‘அருவி’ டீஸர்

  | November 09, 2017 17:26 IST
Arun Prabu Purushothaman

துனுக்குகள்

  • ‘அன்பின் கொடி’ சிங்கிள் டிராக் செம லைக்ஸ் குவித்தது
  • பல ஃபிலிம் ஃபெஸ்டிவல்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்றிருக்கிறது
  • இப்படத்தை டிசம்பர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்
அசோக் செல்வனின் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்திற்கு பிறகு ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு – எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ள படம் ‘அருவி’. இப்படத்தை அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். சமூக பிரச்சனைகளை ஒரு பெண்ணின் பார்வையில் சொல்வதுபோல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதில் ஹீரோயினாக அதிதி பாலன் என்பவர் அறிமுகமாகிறார். பிந்து மாலினி – வேதாந்த் பரத்வாஜ் இணைந்து இசையமைத்துள்ள இதற்கு SHELLY CALIST ஒளிப்பதிவு செய்துள்ளார், RAYMOND DERRICK CRASTA படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படம் ஷாங்காய், டெல்லி, மும்பை, பஞ்சாப் மற்றும் கேரளாவில் நடைபெற்ற ஃபிலிம் ஃபெஸ்டிவல்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்றிருக்கிறது.
 

ஆகையால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் ‘அன்பின் கொடி’ எனும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டுள்ளனர். இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தின் ஆடியோவை நாளை (நவம்பர் 10-ஆம் தேதி)-யும், டிரையிலரை வருகிற நவம்பர் 16-ஆம் தேதியும், படத்தை டிசம்பர் 1-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்