முகப்புகோலிவுட்

சம்பள பாக்கி கேட்டு அரவிந்த் சாமி வழக்கு - மனோபாலாவுக்கு நோட்டீஸ்

  | September 12, 2018 16:46 IST
Sathuranga Vettai 2 Movie

துனுக்குகள்

  • ‘சதுரங்க வேட்டை’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • இதன் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இவ்வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்ததாம்
சித்திக்கின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திற்கு பிறகு நடிகர் அரவிந்த் சாமி கைவசம் நிர்மல் குமாரின் ‘சதுரங்க வேட்டை 2’, செல்வாவின் ‘வணங்காமுடி’, கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’, மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்’, இயக்குநர் ராஜபாண்டி படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘சதுரங்க வேட்டை 2’ படத்திற்கு முதல் பாகத்தை இயக்கிய H.வினோத் கதை – திரைக்கதை – வசனம் எழுதியுள்ளார், ‘சலீம்’ புகழ் NV.நிர்மல் குமார் இயக்கியுள்ளார். அரவிந்த் சாமிக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், நாசர், பிரகாஷ் ராஜ், ராதாரவி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இதற்கு KG.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், SP.ராஜா சேதுபதி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘பிக்சர் ஹவுஸ்’ நிறுவனம் சார்பில் நடிகர் மனோபாலா தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர், டீசர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியான ரூ.1.79 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்ததாம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், அரவிந்த் சாமி தரப்பினரிடம் இப்பபடத்தின் ரிலீஸுக்கு தடை கேட்காமல் வழக்கு தொடர்ந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அரவிந்த் சாமி தரப்பினர் படத்தின் ரிலீஸை தடுப்பது எங்களது நோக்கம் அல்ல என்றும், சம்பள பாக்கி வந்தால் போதும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து இது குறித்து விளக்கம் கேட்டு மனோபாலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கின் விசாரணையை வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்