முகப்புகோலிவுட்

வெளியானது 'செக்கச்சிவந்த வானம்' படத்தின் கேரக்டர் போஸ்டர்

  | August 13, 2018 19:06 IST
Chekka Chivantha Vaanam

துனுக்குகள்

  • இதில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதாம்
  • ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா’ நிறுவனம் தயாரிக்கிறது
  • படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்
கார்த்தியின் ‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘செக்கச்சிவந்த வானம்’. இதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, தியாகராஜன், ஜெயசுதா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதாம்.

விஜய் சேதுபதி போலீஸாக வலம் வரவுள்ளார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர் மணிரத்னமின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
 
இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். தற்போது, நடிகர் அரவிந்த் சாமியின் கேரக்டர் (வரதன்) போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை தமிழ், தெலுங்கு (நவாப்) என 2 மொழிகளில் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்