விளம்பரம்
முகப்புகோலிவுட்

அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ டீஸர்

  | September 29, 2017 18:43 IST
Arvind Swami

துனுக்குகள்

  • ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய சித்திக்கே இயக்குகிறார்
  • மலையாளத்தில் மம்மூட்டி - நயன்தாரா நடித்திருந்தனர்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது
‘போகன்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு அரவிந்த் சாமி கைவசம் நிர்மல் குமாரின் ‘சதுரங்க வேட்டை 2’, செல்வாவின்‘வணங்காமுடி’, சித்திக்கின் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ ரீமேக், கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இது தவிர அரவிந்த் சாமி கால்ஷீட் டைரியில் மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படமும் உள்ளது. இதில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’, 2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம்.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கையும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என டைட்டில் சூட்டி, ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய சித்திக்கே இயக்குகிறார். அரவிந்த் சாமிக்கு ஜோடியாக அமலா பால் டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், 'தெறி’ பேபி நைநிகா, ‘சேதுபதி’ புகழ் மாஸ்டர் ராகவன், சூரி, ரோபோ ஷங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அரவிந்த் சாமிக்கு எதிராக நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்டாப் ஷிவ்தாசனி நடிக்கிறார்.
 

அம்ரிஷ் இசையமைத்து வரும் இதனை‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டீஸரை அரவிந்த் சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்