முகப்புகோலிவுட்

துவங்கியது அரவிந்த் சாமியின் அடுத்த பட ஷூட்டிங்

  | September 19, 2018 15:24 IST
Arvind Swami

துனுக்குகள்

  • அரவிந்த் சாமி கைவசம் 5 படங்கள் உள்ளது
  • இதில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ரெஜினா டூயட் பாடி ஆடவுள்ளார்
  • இதனை ‘மூவிங் ஃபிரேம்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது
சித்திக்கின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திற்கு பிறகு நடிகர் அரவிந்த் சாமி கைவசம் நிர்மல் குமாரின் ‘சதுரங்க வேட்டை 2’, செல்வாவின் ‘வணங்காமுடி’, கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’, மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அரவிந்த் சாமி கமிட்டாகியுள்ளார்.

‘கள்ளபார்ட்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘என்னமோ நடக்குது, அச்சமின்றி’ புகழ் ராஜபாண்டி இயக்கவிருக்கிறார். இதில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ரெஜினா டூயட் பாடி ஆடவுள்ளார்.

இதன் ஷூட்டிங்கை இன்று (செப்டம்பர் 19-ஆம் தேதி) முதல் பூஜையுடன் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ‘மூவிங் ஃபிரேம்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கவுள்ள இதற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்