முகப்புகோலிவுட்

தள்ளிப்போனது கார்த்திக் நரேனின்‘நரகாசூரன்’

  | August 25, 2018 16:26 IST
Naragasooran Film

துனுக்குகள்

  • சென்சார் குழு எந்தவித கட்டுமின்றி ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது
  • முதலில், இப்படத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர்
  • இதன் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
ரகுமானின் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நரகாசூரன்’. இதனை ‘ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரித்துள்ளார். இதில் ஹீரோவாக அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ‘மாநகரம்’ சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். ‘மாயா’ புகழ் ரான் யோஹான் இசையமைத்துள்ள இதற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் எந்தவித கட்டுமின்றி ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். முதலில், படத்தை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, படத்தின் ரிலீஸை செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்