முகப்புகோலிவுட்

சர்காரை தொடர்ந்து தளபதி 63-லும் சர்ச்சை!

  | January 16, 2019 11:26 IST
Vijay 63

துனுக்குகள்

  • தெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய்யை இயக்குகிறார் அட்லி
  • இந்த படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய கதை
  • மெர்சல் படத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது
‘தெறி', 'மெர்சல்' படங்களை அடுத்து அட்லி நடிகர் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். பெயரிடப்படாமல் இருக்கும் இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் கூறியிருப்பது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் 63 வது படமாக உருவாவதால் ‘தளபதி 63' ஹாஷ் டாக் ஏற்கனவே வைராலாகி இருக்கிறது. இந்த படத்தின் பூஜை வரும் 20 தொடங்கி 21ல் இருந்து படபிடிப்பு தொடங்குகிறது. தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய கதை என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்காக தீவிர பயிற்சியில் அவர் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க பெண்கள் கால்பந்து போட்டியும் அதன் பின்னால் இருக்கும் அரசியலையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் புகார் தெரிவித்துள்ளார்.

அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அந்த உதவு இயக்குநர் கூறியிருக்கிறார். சட்ட ரீதியாக இந்த பிரச்சனையை அணுக போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே, கத்தி, சர்கார் திரைப்படம் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் திரையிடப்பட்டது. தற்போது இன்னும் தொடங்கவே இல்லை அதற்குள் எண்டு கார்டு போட முயற்சி நடப்பதாக விஜய் ரசிகர்கள் வேதனையில் இருக்கிறார்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்