முகப்புகோலிவுட்

ஜூன் 29ல் வெளியாகும் சசிகுமாரின் 'அசுரவதம்'

  | June 14, 2018 12:36 IST
Asuravadham Movie Release Date

துனுக்குகள்

  • சசிக்குமார் நடிப்பில் உருவாக்கியிருக்கும் படம் `அசுரவதம்'
  • மருதுபாண்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்
  • இப்படம் ஜூன் 29ல் வெளியாக இருக்கிறது
கடைசியாக டிசம்பரில் வெளியான 'கொடி வீரன்' படத்திற்கு பிறகு, இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரின் கைவசம் 'அசுரவதம்' மற்றும் 'நாடோடிகள் பார்ட் 2' ஆகிய திரைப்படங்கள் இருக்கிறது.

நல்ல திறமைகளுக்கு அதிக அளவில் வாய்ப்பு தரும் நடிகர் சசிகுமார், `சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தை இயக்கிய மருதுபாண்டியனுடன் `அசுரவத'த்தில் இணைந்திருக்கிறார். ரிவெஞ்ச் த்ரில்லரான 'அசுரவதம்' படம் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.


இந்நிலையில் இத்திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 'கோலி சோடா 2', ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' மற்றும் 'டிராஃபிக் ராமசாமி' ஆகிய திரைப்படங்களும் இம்மாதம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்