முகப்புகோலிவுட்

'பூமராங்' பட டிரெய்லரை வெளியிட்ட மணிரத்னம்

  | August 03, 2018 12:05 IST
Boomerang Movie

துனுக்குகள்

  • அதர்வாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதில் மேகா ஆகாஷ் விஸ்காம் படிக்கும் மாணவியாக வலம் வரவுள்ளாராம்
  • இப்படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் உபேன் படேல் நடித்துள்ளார்
கெளதம் கார்த்திக்கின் ‘இவன் தந்திரன்’ படத்திற்கு பிறகு ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பூமராங்’. இதில் ஹீரோவாக அதர்வா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புகழ் மேகா ஆகாஷ் டூயட் பாடி ஆடியுள்ளார். இதில் மேகா ஆகாஷ் விஸ்காம் படிக்கும் மாணவியாக வலம் வரவுள்ளாராம்.

மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம், இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். அதர்வாவுக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் ஹிந்தி நடிகர் உபேன் படேல் நடித்துள்ளார். இப்படத்தில் அதர்வாவுக்கு மூன்று வித்தியாசமான லுக்காம். அதற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு அதர்வா ப்ரோஸ்தடிக் மேக்கப் போட்டுக் கொண்டாராம்.
 

ரதன் இசையமைத்து வரும் இதற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கண்ணனே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரெய்லரை பிரபல இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்