முகப்புகோலிவுட்

நான்காவது முறை தள்ளிப் போன 'செம போத ஆகாத'

  | May 21, 2018 11:22 IST
Semma Botha Aagathey Movie

துனுக்குகள்

 • இதனை அதர்வாவே தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்
 • இதன் 2 டிரெய்லர்கள் & பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது
 • ஏற்கெனவே, 2 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது
ஓடம் இளவரசின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செம போத ஆகாதே’. இப்படத்தை ‘பாணா காத்தாடி’ புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். அதர்வாவுக்கு ஜோடியாக மிஷ்டி, ‘காவியத் தலைவன்’ புகழ் அனைகா சொட்டி என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர்,மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை அதர்வாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘KICKASS எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், 2 டிரெய்லர்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. ஏற்கெனவே, 2 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. கடந்த வாரம் படத்தை வருகிற மே25-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது, மீண்டும் படத்தின் ரிலீஸை ஜூன் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்