விளம்பரம்
முகப்புகோலிவுட்

நான் நேரடி தெலுங்கு படத்தை இயக்கவுள்ளேனா? – அட்லி மறுப்பு

  | April 06, 2018 10:39 IST
Atlee

துனுக்குகள்

  • ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அட்லி
  • ‘மெர்சல்’ தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகி மெகா ஹிட்டானது
  • அட்லியின் புதிய படம் நேரடி தெலுங்கு படம் என கூறப்பட்டது
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சீடரான அட்லி, ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யை வைத்து ‘தெறி’ எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தார் அட்லி.

மேலும், அட்லி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்' மூலம் ஜீவாவின் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை தயாரிக்கவும் செய்தார். சமீபத்தில், மீண்டும் விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்திற்காக கூட்டணி அமைத்தார் அட்லி. இந்த படத்தில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்திருந்தார். விஜய் ரசிகர்களுக்கு கடந்த ஆண்டு (2017) தீபாவளி விருந்தாக ரிலீஸான இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

சமீபத்தில், அட்லி இயக்கவிருக்கும் அடுத்த படம் நேரடி தெலுங்கு படம் என்றும், டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 5-ஆம் தேதி) ஒரு பங்க்ஷனில் கலந்து கொண்ட இயக்குநர் அட்லி தனது புதிய படம் நேரடி தமிழ் படம் தான் என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்