முகப்புகோலிவுட்

3-வது முறையாக விஜய்யுடன் கைகோர்க்கும் அட்லி

  | October 17, 2017 12:53 IST
Atlee Next Film

துனுக்குகள்

  • அட்லி – விஜய் காம்போவில் உருவாகியுள்ள 2-வது படம் ‘மெர்சல்’
  • ‘மெர்சல்’ நாளை தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது
  • இப்படத்தையும் ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்கிறதாம்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சீடரான அட்லி, ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யை வைத்து ‘தெறி’ எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தார் அட்லி.

இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்திற்காக கூட்டணி அமைத்தார் அட்லி. இந்த படத்தில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்துள்ளாராம். இதன் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. படத்தை நாளை (அக்டோபர் 18-ஆம் தேதி) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், விஜய்யுடன் மூன்றாவது முறையாக அட்லி கைகோர்க்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அட்லியே மீடியாவிற்கு அளித்த பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தியுள்ளார். இப்படத்தையும் ‘மெர்சல்’ தயாரிப்பு நிறுவனம் ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்