முகப்புகோலிவுட்

100­-வது நாளை எட்டிய ‘பாகுபலி 2’

  | August 05, 2017 14:05 IST
Celebrities

துனுக்குகள்

  • ‘பாகுபலி 2’ பாக்ஸ் ஆஃபீஸில் கோடி கணக்கில் வசூல் மழை பொழிந்தது
  • இந்திய சினிமாவுலகிற்கே மேஜிக்காக நிகழ்த்தி காட்டியவர் ராஜமௌலி
  • தெலுங்கு & ஹிந்தியில் ‘ஐ-மேக்ஸ்’ தொழில்நுட்பத்தில் வெளியானது
2015-ஆம் ஆண்டு ‘பாகுபலி’ முதல் பாகம் ரிலீஸானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் (2017) ஏப்ரல் 28-ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியானது. உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வந்த ‘பாகுபலி 2’-வில் ஹீரோவாக ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடித்திருந்தார். ரிபெல் ஸ்டாருக்கு எதிராக வில்லன் வேடத்தில் ரானா டகுபதி மிரட்டியிருந்தார்.

மேலும், மிக முக்கிய வேடங்களில் சத்யராஜ், நாசர், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர். விஷுவல் ட்ரீட்டான ‘பாகுபலி’யின் வெர்ஷன் 2.0, ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?’ என்ற கேளிவிக்கான விடையாக மட்டுமின்றி, இப்படி ஒரு பிரம்மாண்டமான படைப்பை ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்திய சினிமாவுலகிற்கே மேஜிக்காக நிகழ்த்தி காட்டிய பெருமை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கே சேரும்.

எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்த இதற்கு கே.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையேவும், சினிமா பிரபலங்களிடையேவும், விமர்சன ரீதியாகவும், மிகப் பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் கோடிக்கணக்கில் வசூல் மழை பொழிந்தது. இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் ‘பாகுபலி 2’ இன்றோடு (ஆகஸ்ட் 5-ஆம் தேதி) 100-வது நாளை எட்டியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்