முகப்புகோலிவுட்

சாதனைக்கு மேல் சாதனை புரிந்து வரும் பாகுபலி

  | August 07, 2017 14:34 IST
Movies

துனுக்குகள்

  • சென்ற வருடம் கபாலி மற்றும் தர்மதுரை படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியது
  • பாலிவுட்டிலும் 100 நாட்களை கடந்துள்ளது தான் இதன் சிறப்பம்சமே
  • இந்தியாவில் மட்டும் 625 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது
இன்றைய திரைத்துறை சந்தித்து வரும் சவால்களில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் அல்லது ஒரு வருடம் தியேட்டர்களில் ஓடிய திரைப்படம் என்று கூறுவது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. ஒரு வருடத்திற்கு 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழ் திரை உலகில் வெளியாகி இருந்தாலும் 100 நாட்களை கடந்தது ஓடிய திரைப்படம் என்னவோ இரண்டு தான் (கபாலி, தர்மதுரை) இந்த ஆண்டு பாகுபலி 2 திரைப்படம் தொடர்ந்து 100 நாட்களாக வெளியிட்ட பல இடங்களில் இருந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக பாலிவுட்டிலும் 100 நாட்களை கடந்துள்ளது தான் இதன் சிறப்பம்சமே.

இது ஒரு மிகப்பெரிய சாதனை தான். ஏனென்றால், பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார்கள் என்று போற்றப்படும் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டியூப்லைட்’, பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜாப் ஹேரி மெட் செஜால்’, அனில் கபூர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘முபாராகான்’ உள்ளிட்ட படங்களுக்கு சவால் விடுத்தது பாகுபலி 2 பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றி நடை போட்டு வருகிறது.

இன்றைய சூழ்நிலையில் ஒரு திரைப்படம் ஒரு வாரம் மட்டும் ஓடினாலே படத்திற்கு செய்யப்பட செலவு செய்யப்பட்ட செலவை எடுத்து விடலாம். ஆனால் பாகுபலி 2 உலக அளவில் சுமார் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 625 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்